Friday, February 4, 2011

அவள்

"அவள்
என் அன்பிற்குரியவள்!
இந்த அன்பிற்குரியவள்!
தனியே இவன் பிறந்தும்
என்னில் பாதி.

என் தோழியானவள்,
துன்ப நேரங்களில்
தோள்களானவள்.

நாங்கள் பிரிவெய்தக் கூடாது.
வயது மூத்து நரை கழலும் போதும்
நாங்கள் பிரிவெய்தக் கூடாது.

கவிதை கூட கலப்படம் எய்தும்.
என்னவள் இலக்கணம்
இப்படித்தான் என வரையறுக்கப்பட்டவள்.

அவளை நான் காதலித்திருக்கவேண்டும்
நாட்கள் வீணே நகர்ந்து போய்விட்டன.
வாழ்ந்த இடம் கூட தொலைவாகிவிட்டது.
ஆம்,
அவளை நான் காதலித்திருக்க வேண்டும்
அப்படியெனில்,
என் முயற்சிகளில் வெற்றி சாதித்திருப்பேன்,
வாழ்வியலில் ஜெயித்திருப்பேன்
என் ஊன்றுகோலாக அவளை கைக்கொண்டு.

இருந்தாலும் என்ன?
காலம் தாமதம் எனினும்
எல்லாம் கடந்தவன் காட்டிக்கொடுத்தான்
அவளை எனக்கே கட்டிக் கொடுத்தான்
இதோ உன் மனைவி
இவள் தான், இவளே தான் என்று! 

ஜாதி (Caste)

" தென்னங்கீற்றைத் தழுவும்
தென்றல் காற்றும் கூட
என்ன ஜாதி என்றா கேட்டது?
பூவுக்கும் வண்டுக்குமிடையே
புதியதோர் தடைச் சட்டம்
பூமியிலே யார் போட்டது?"
                         - க. அன்பழகன் ( 1997  

Tuesday, February 1, 2011

தூண்டல்கள்

தொலைக்காட்சித் தொடரில்
உன் பெயர் கொண்ட
கதாபாத்திரம்  .....

கடைவீதி நடந்தால்
உன் பெயர் எழுதிய
விளம்பரப் பலகை ....

சாலை கடக்கையில்
எதிர்பட்டுப் போகும்
வாகனத்தில் உனது பெயர் ....

நான்
ஒதுங்க நினைத்தும்
விடவில்லை
உன் ஞாபகத் தூண்டல்கள் .....

மழை விட்டும்
விடாத
தூவானம் போல....!

- சோ.அன்னைதாசன் 
  மேலையூர் - 609107
  செல்: 9976784919